Wednesday 21 August 2013

பெற்றோருடன் செல்ல சேரன் மகள் தாமினி சம்மதம்!!

பெற்றோருடன் செல்ல சேரன் மகள் தாமினி சம்மதம்!!

dham3_0_0_0_0 
  1. காதல் விவகாரத்தில் சிக்கி கோர்ட் படியேறிய சேரனின் இரண்டாவது மகள் தாமினி, தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகளிடம் கூறியுள்ளார். தாமினியின் விருப்பத்தை ஏற்று நீதிபதிகளும் அவர் யாருடன் செல்ல விருப்பப்படுகிறாரோ அவருடனேயே செல்லலாம் என உத்தரவிட்டனர்.
  2. திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவரை காதலித்ததால், பிரச்னையானது. காதலன் சந்துரு பக்கம் தாமினி திடீரென சேர்ந்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, சேரன் மீது புகார் செய்ததால், பிரச்னை பரபரப்பானது. இதையடுத்து, “என் மகள் தாமினியை, எனக்கு எதிராக சந்துரு தூண்டி விட்டுள்ளார். காதலனுடன் அனுப்பினால், என் மகளின் உயிருக்கு ஆபத்து; அவளை காப்பாற்றுங்கள் என, போலீசில் சேரன் புகார் கொடுத்தார்.
  3. கண்ணீர் பேட்டி
  4. இதற்கிடையே சேரன் தனது மனைவி செல்வராணியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து சந்துரு நல்லவன் கிடையாது, அவன் பல பெண்களை ஏமாற்றியுள்ளான். என் மூத்த பெண்ணிடமும் பேஸ்புக்கில் காதல் சொல்லி வலை விரித்துள்ளான். எனது சொத்துக்காகத்தான் அவன் நல்லவன் போல் நடித்து என் பெண்ணை ஏமாற்றியுள்ளான். ஒரு கெட்டவனுக்கு எப்படி என் மகளை நான் கொடுக்க முடியும், ஒரு தந்தையாக யாரும் இதை செய்ய மாட்டார்கள் என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார். அதேபோல் சேரனுக்கு ஆதரவாக அமீர், கரு.பழனியப்பன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட இயக்குநர்களும் சந்துருவை பற்றியும், சந்துருவின் குடும்பம் பற்றியும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
  5. ஆட்கொணர்வு மனு தாக்கல்
  6. இந்நிலையில் தாமினியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சந்துருவின் தாயார்‌ சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன்படி தாமினியும் கோர்ட்டில் ஆஜரானார்.
  7. காதலன் உடன் செல்ல விருப்பம்
  8. அப்போது நீதிபதிகள் முன்பு ஆஜரான தாமினி, தான் காதலன் சந்துரு உடன் தான் செல்வேன், பெற்றோர் உடன் செல்ல விரும்பவில்லை என்று பிடிவாதமாக கூறினார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை தாமினியை அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  9. பெற்றோருடன் செல்ல விருப்பம்
  10. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோரது முன்பு வந்தது. அப்போது ஆஜரான தாமினி, தான் பெற்‌றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதற்கு சந்துருவின் தாயார் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மதியத்திற்கு மேல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு பின்னர் மதியத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமினி யாருடன் செல்ல விருப்பப்படுகி‌றாரோ அவருடனே செல்லலாம் என உத்தரவிட்டனர்.
  11. மனு தள்ளுபடி
  12. மேலும் சந்துருவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment