Wednesday 21 August 2013

சாதா பூரி சாப்பிட்டு சலித்துவிட்டதா

சாதா பூரி சாப்பிட்டு சலித்துவிட்டதா? சுவையான பருப்பு பூரி செய்து சாப்பிடுங்கள். இதோ உங்களுக்கான செய்முறை...


என்ன தேவை?

கோதுமை மாவு - 1 ஆழாக்கு
பாசிப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையானது
மிளகு - 1/4 தேக்கரண்டி பொடித்தது
சீரகம் - 1/4 தேக்கரண்டி பொடித்தது

எப்படி செய்வது?

பருப்புகளை ஊற வைத்து விழுதாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் மற்ற பொடிகளைக் கலந்து, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

கோதுமை மாவைப் பிசைந்து பூரியாக இட்டு, வதக்கி வைத்த விழுதைச் சிறிது எடுத்து வைத்து மூடிவிடவும். எண்ணெயில் பொரிக்கவும்.

இதே முறையில் உருளைக்கிழங்கை வேக வைத்து, பூரியை இட்டு உள்ளே மூடிவிட்டுப் பொரிக்கலாம்.

காய்கறிகளையும் அரிந்து வேகவிட்டு உள்பக்கம் வைத்தும் செய்யலாம்.

No comments:

Post a Comment